×

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு

நெல்லை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன. அனைத்து கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடுகளை முடித்துவிட்டு, தற்போது தலைவர்கள், சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய செய்து வருகின்றனர்.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்தனர். இந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Nella ,BJP ,Nayinar Nagendran ,Tamil Nadu Parliamentary elections ,Tamil Nadu ,Dimuka ,Adimuka ,Baja ,Tamil Party ,Dinakaran ,
× RELATED நெல்லை பாஜக வேட்பாளர் நயினார்...